2025 நவம்பர் 08, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி

Freelancer   / 2025 நவம்பர் 08 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டஞ்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் உயிரிழந்தார்.

சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளின்படி, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள், அப்பகுதியை விட்டு தப்பிச் சென்ற காட்சியும் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் திட்டமிட்ட குற்றவாளியான பூங்கொடி கண்ணாவுக்கு நெருக்கமானவர் என்றும், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொட்டஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X