2021 மே 06, வியாழக்கிழமை

13ஆவது திருத்தத்தை அகற்றக்கோரி கொழும்பில் மாநாடு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அஸ்ரப்.ஏ.சமத்)


13ஆவது திருத்தச் சட்டத்தை அகற்றக் கோரி அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவின் சிஹல உறுமய கட்சியும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.

மகா சங்க மாநாடும் அநகாரிக தர்மபால நிகழ்வும் இடம்பெற்ற இந்த மாநாட்டில், 'பௌத்த நாட்டில் இனரீதியாக பிரிவினை இல்லை எனவும் இது சகலரும் வாழக்கூடிய ஒரே நாடு' என்றும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றக் கோரியும் மற்றும் அதன் ஆபத்து பற்றியும் தேரர்களுக்கு அமைச்சர்கள் விளக்கமளித்தனர்கள்.

இம்மாநாட்டுக்கு நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் வருகை தந்த பௌத்த சங்க தேரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .