Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 02 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
கொழும்பு மட்டக்குளி - கல்கிஸைக்கு இடையில் 155 ஆம் வழிதடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவ்வழிதடத்தில் சேவையில் ஈடுபடும் 10 பஸ்களை மேல்மாகாண போக்குவரத்து அதிகாரிகள் நீக்கியதையடுத்தே இப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் இயக்குனர்கள் சங்கம் தெரிவித்தது.
மேற்படி சங்கத்தின் பொருளாளர் என். செல்வராஜா இது தொடர்பாக கூறுகையில், 52 பஸ்கள் இவ்வழிதடத்தில் சேவையில் ஈடுபட்டுவந்ததாகவும் கல்கிஸை, மட்டக்குளியிலிருந்து தலா 26 பஸ்கள் புறப்படுவது வழக்கமெனவும் இப்போது இரு பகுதிகளிலுமிருந்து தலா 5 பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், ஹெட்டியாவத்தை- சொய்ஸாபுரத்திற்கு இடையில் அனுமதிபெறாமல் 9 பஸ்கள் இதே வழிதட இலக்கத்தைப் பயன்படுத்தி இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்படி 10 பஸ்களை மீண்டும் இவ்வழிதடத்தில் சேவையில் உள்ளடக்கப்படும்வரை பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் என். செல்வராஜா மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .