Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
பௌத்த விகாரை வளவிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்ற தேரர் கிணற்றில் விழுந்துபரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடபத்தர பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பிடபத்தர சிறீ டக்கித கிரி விகாரையின் டகனதுரே பரினந்த ஹிமியோ (வயது 76) என்ற தேரரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இவரது மரண விசாரணையை பூகொடை மரண விசாரணை அதிகாரி விஜேசேன ஹப்பு ஆராய்ச்சி மேற்கொண்டதோடு பிரேத பரிசோதனையை கம்பஹா வைத்தியர் ஏ.கே.விகேவிக்ரம மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தொம்பே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
06 Nov 2025