Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கொழும்பு, பம்பலப்பிட்டி சந்தி முதல் கொள்ளுப்பிட்டி சந்தி வரையான காலி வீதியினை முழுமையான ஒரு வழிப்பாதையாக புனரமைக்கும் நடவடிக்கைக்கு நூறு மில்லியன் ரூபா செலவழிக்கப்படுவதாக கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இத்திட்டத்தை நான்கு மாதங்களுக்குள் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வீதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வீதி விளக்குக் கம்பங்களை அகற்றி வீதியின் இரு புறங்களுக்கும் மாற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஒமர் காமில் கூறினார்.
அத்துடன் காலி வீதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையும் ஏற்கனவே போடப்பட்டிருந்த நீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்களை அமைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மின்சார சபையும் வீதியின் இரு மருங்கிலும் மின் கம்பங்களை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒமர் காமில் தெரிவித்தார்.
புனர்நிர்மாணம் செய்து புதிதாக அமைக்கப்படும் வீதியில் ஒரே நேரத்தில் ஆறு வாகனங்கள் செல்ல முடியும் . அத்துடன் வாகனங்களை நிறுத்து வைக்கக்கூடிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். (Pic By:Samantha Perera)
10 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
37 minute ago