2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

'காலநிலை பயங்கரவாதத்தின் விளைவு'

Super User   / 2010 நவம்பர் 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜெயசேகர)

அடைமழை காரணமாக தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்தோடிய பின்னர் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

குறுகிய நேரத்தில் பெறுமளவு மழை பெய்தமை, காலநிலை பயங்கரவாதத்தின் விளைவு எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிறிய உப மின்நிலையங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

தியவன்ன, வாழைத்தோட்டம், அதுல்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள முதனிலை உப மின்நிலையங்களையும் இன்னும் பல சிறு உப மின் நிலையங்களையும் செயலிழக்க செய்ததாகவும் இதனால் கொழும்பு மற்றும் மேல மாகாணத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்க நேரிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் மின் நிலையங்கள் நீரில் மூழ்கினால் மின் நீரில் பாய்ந்து பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனாலேயே உப மின் நிலையங்களின் செயற்பாட்டினை நிறுத்தினோம் என்றும் வானிலை சாதகமாகும் போது மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் கூறினார்.

"இதுதான் கலநிலை பயங்கரவாதம்" அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பாரியளவு காபனீரெட்சையீட்டை வளிமண்டலத்தில் சேர்க்கின்றன. இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் விளையும் கெடுதிகளை இலங்க போன்ற நாடுகள் தாங்கிக்கிக் கொள்ளவேண்டியுள்ளது என அமைச்சர் மேலும் கூறினார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .