Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனார்கலி அகர்ஷாவை கடத்தியதான குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தொடர்ப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் குற்றமற்றவராக காணப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பின் போதே துமிந்த சில்வா எம்.பி. விடுவிக்கப்பட்டுள்ளார்.
நடிகையான அனார்கலி அகர்ஷா, தனது பதிய திரைப்படமொன்றுக்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்காக வெள்ளவத்தை சுவர்ணா வீதிக்குச் சென்றிருந்த போது துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களால் தான் கடத்தப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் திகதி செய்யப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அதன் தீர்ப்பு இன்று கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago