2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தலஸீமியா நோயாளிகளுக்கு முஸ்லிம் எய்ட் நன்கொடை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தலஸீமியா நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள் 90 பேருக்கு அவசியமான அன்றாட பாவனைப் பொருட்களான சவர்க்காரம், பற்பசை, பற்தூரிகை, தேயிலை போன்றவற்றை உள்ளடக்கிய பொதிகளை ராகம வடக்கு பொது வைத்தியசாலை தலஸீமியா யுனிட்டுக்கு பொறுப்பான பேராசியர் அனுஜ பிரேமவர்த்தனவிடம் முஸ்லிம் எய்ட் அலுவலர்கள் ஜனாப் அர்ஷாத், திரு உதார சேனநாயக்க ஆகியோர் இன்று யைளித்தனர்.

அத்துடன், 90 நோயாளிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு கலை கலாசார நிகழ்ச்சியொன்றை ராகம மருத்துவ பீடம் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அனைத்து நோயாளிகளும் மகிழ்சியுடன் பங்குபற்றினர்.

தலஸீமியா நோயாளிகளுக்கு உதவும் முஸ்லிம் எய்ட் இன் கருத்திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் மூன்று நோயாளிகளுக்கு சுயதொழில், சிறுகடை தொடங்குவதற்கான நிதியுதவியும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--