2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

போலி கர்ப்பிணி கைது

Super User   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்பிணியாக இருப்பதாக கூறி பொய்கூறி களுபோவில வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிபெற்ற  பெண்ணொருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இப்பெண் 8-9 மாத கர்ப்பினி போன்று தோற்றமளிப்பதற்காக தனது வயிற்றில் துணிகளை சுற்றிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அப்பெண்ணும் அவரின் தாயார் எனக் கூறப்பட்ட மற்றொரு பெண்ணும் வைத்தியசாலை அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குழந்தைகளை திருடுவதில் இச்சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேற்படி பெண்ணின் வயிற்றிலுள்ள குழந்தையின் நாடித்துடிப்பை சோதிப்பதற்கு மருத்துவர் ஒருவர் முயன்றபோதே இம்மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--