Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 02 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்குகளைச் சேர்ப்பதற்காக தேசிய இளைஞர் கூட்டுறவுத் திட்டத்தை காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை என இளைஞர் விவகார அமைசசர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மண்டபத்தில் இன்று 2 புதன்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞர் சேவை கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
மிகச் சிறந்த நிஸ்கோ மாவட்டங்களுக்கான தெரிவில் முறையே முதலாம் இரண்டாம் மற்றும் 3 ஆம் இடத்தைப்பெற்ற பதுளை, கொழும்பு காலி ஆகிய மாவட்டங்களுக்கு இந்நிகழ்வில் சான்றிதழ் மற்றும் 100,000, 750,00 50,000 ரூபா பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேவேளை நிஸ்கோ தேசிய சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்காக கிண்ணம் மற்றும் பணப்பரிசு கையளிக்கப்பட்டன.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும அங்கு தொடர்ந்து பேசுகையில்,
'விவசாய பண்ணை என்ற பெயரில் 6 காணிகள் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு சொந்தமாக இருந்தன. அவை வெறும் காணிகளாகவே எஞ்சியிருந்தன.
அவற்றில் 68 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட காணியை பன்னல விவசாய பண்ணையை நாம் நிஸ்கோ திடடத்திற்கு நாம் கொடுத்தோம். சில மாதங்களுக்குள் அதில் நல்லதொரு முன்னேற்றம் காணப்படுகிறது. நாம் பேசுவதில் குறைத்து செயலில் அதிகளவு செய்வதனால் இன்னொரு உதாரணம் பற்றி கூறப்போவதில்லை.
இன்று நம் நாடு மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் 2005 ஆம் ஆம் ஆண்டு நாம் ஜனாதிபதி தேர்தலின்போது 'புதிய இலங்கை' என்ற தொனிப்பொருளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
போர்த்துக்கேயர் 1505 இல் இலங்கைக்கு வந்தனர். அந்த காலத்திலிருந்து இன்றுவரை நம் நாட்டில் வெளிநாடுகளின் திட்டங்களுக்கு விருப்பமான வகையில்தான் ஆட்சி செய்யப்பட்டது. 500 ஆண்டுகள் தோறும் நடந்த இந்த பாதையிலிலிருந்து விலகி ஒரு புதிய இலங்கையை அமைப்பதுதான் ஜனாதிபதியின் நோக்கமாகும் என்றார்.
7 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
29 minute ago
36 minute ago