Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கொழும்பு துறைமுக அதிகார சபையின் தேசிய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் நியமிக்கப்பட்டுள்ளார்.
1999 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் தேசிய ஐக்கிய தொழிலாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் அண்மையில் இடம்பெற்ற சங்கத்தின் கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் நியமிக்கப்பட்டார்.
இன்று துறைமுக அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற சங்கத்தின் 11 ஆவது பொதுக் கூட்டத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவு செய்யப்பட்டார்.
3000 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஜக்கிய தொழிலாளர் சங்கம், நாட்டின் ஏனைய துறைமுக ஊழியர்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு துறைமுக தேசிய ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago