Super User / 2011 ஜூன் 16 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச் எம்.பௌஸான்)
21ஆம் நூற்றாண்டின் ஊடகம் என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
பியகம கல்வி வலய தமிழ்மொழி மூல பாடசாலைகளின் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கான இந்த செயலமர்வு நேற்று புதன்கிழமை மல்வானை அல் - முபாரக் தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புக்களில் மாணவர்களுக்கு விரிவுரை நடத்தப்பட்டதுடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக கல்லூரியின் பழைய மாணவர்களான நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், தகவல் திணைக்கலத்தின் பிரதி பணிப்பாளர்களான அலி ஹஸன், ஹில்மி முஹமட், சமூக சேவையாளர்களான பௌசுல் ஜிப்ரி மற்றும் இஸ்மாயில் ஹாஜியார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago