2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மசாஜ் நிலையத்தின் பெயரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டு : ஐவருக்கு விளக்க மறியல்

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

மசாஜ் நிலையமென்ற பெயரில் விபசார நிலையமொன்றை நடத்தியதாகக் கூறப்படும் 5 பேரை ஜூன் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொள்ளுபிட்டியிலுள்ள இந்நிலையத்தின் முகாமையாளர் உட்பட 5 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் லக்னா ஜயரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முதலாவது சந்தேக நபர் மேற்படி விபசார நிலையத்தை நடத்தி வந்ததாகவும் பெண்கள் நால்வரும் விபசாரத்தில்ஈடுபட்டதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, சந்தேக நபர்கள் அனைவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். மேற்படி நிலையம் ஒரு மசாஜ் சிகிச்சை நிலையமே எனக் கூறிய அவர் பொலிஸார் கட்டுக்கதைகளை கூறுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் சந்தேக நபர்களை ஜூன் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.
 


  Comments - 0

 • IBNU ABOO Sunday, 19 June 2011 03:48 PM

  இதுவும் ஒரு மசாஜ் என்று நினைத்துக் கொண்டார்களோ

  Reply : 0       0

  xlntgson 0776994341;0716597735 sms only Sunday, 19 June 2011 08:50 PM

  உண்மையில் தொடுகை சிகிச்சை என்றாலும் அனுமதிப்பதில்லை என்பது தான் உண்மை!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X