2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபர் தற்கொலை

Super User   / 2011 ஜூன் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்நபர் கைதுசெய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அச்சந்தேக நபர் ஏற்கெனவே 10 கொள்ளைச் சம்பவங்களுக்காக ஏற்கெனவே 8 வருடகாலம் சிறையிலிருந்தவர்.

நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ஹோமாக வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர்   கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .