2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வக்பு சபையின் தலைவராக சட்டத்தரணி சப்றி ஹலீம்டின் நியமனம்

Super User   / 2011 ஜூன் 20 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஒரு பிரிவான வக்பு சபையின் புதிய தலைவராக சட்டத்தரணி சப்றி ஹலீம்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை பிரதமர் தி.மு.ஜயரட்ன இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளார்.

இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் வக்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் கடந்த பல மாத காலமாக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தார்.

வக்பு சபைக்கான தலைவர் நியமனம் தொடர்பில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற மதவிவகார அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனை குழு கூட்டத்தில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் வலியுறுத்தியதையடுத்தே சட்டத்தரணி சப்றி ஹலீம்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Wednesday, 22 June 2011 09:30 PM

    வாழ்த்துகள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .