2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பியகமவில் செக்ஸ் சாதனங்கள் விற்பனை நிலையம் முற்றுகை

Super User   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(திலகரட்ன திஸாநாயக்க, திலக் நிமலசிறி)

பியகம பிரதேசத்தில் செக்ஸ் சாதனங்களை  விற்பனை செய்ததாக கூறப்படும் கடையொன்றை கம்பஹா மாவட்ட மருத்துவ அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதுடன் இத்தகைய செக்ஸ் சாதனங்களை இறக்குமதி செய்து விநியோகித்ததாக கூறப்படும் மேலும் இரு வர்த்தக நிலையங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 150,000 ரூபா பெறுமதியான செக்ஸ் பொம்மைகள், பாலியல் தூண்டற்சாதனங்கள் மேற்படி கடையில் கைப்பற்றப்பட்டதாகவும் அவை இலங்கையில் விற்பனை செய்வதற்கு பதிவுசெய்யப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்பஹா மாவட்ட சுகாதார பணிப்பாளர் லிண்டன் பத்மசிறியின் பணிப்புரையின் கீழ் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

இக்கடை குறித்த விபரங்களை பத்திரிகை விளம்பரமொன்றிலிருந்து பெற்றுக்கொண்டதாகவும் கடையின் உரிமையாளர் விரைவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் உணவு மற்றும் ஒளடத பரிசோதகர் லால் சில்வா தெரிவித்தார்.
 


  Comments - 0

 • Hari Friday, 30 September 2011 05:54 PM

  களவுல செய்தால் அவர்களுக்கு பிரச்சின இல்ல?

  Reply : 0       0

  xlntgson Friday, 30 September 2011 09:05 PM

  இது அவ்வளவு பெரும் பிரச்சினையா, அல்லது விலைத் தகறாரா? கத்திரிக்காய் சமாச்சாரத்துக்கெல்லாம் முக்கியத்துவம்! நாய் வளர்க்கக்கூடாது என்று சட்டம் போட்டால் நல்லது!

  Reply : 0       0

  pasha Friday, 30 September 2011 10:07 PM

  நாய் வளர்பதற்கும் இந்த செய்திக்கும் என்ன தொடர்பு? xIntgson முதலில் செய்தியை கவனமாய் வாசிங்கள் பின்னர் கருத்து சொல்லுங்கள்.

  Reply : 0       0

  asker Saturday, 01 October 2011 05:37 PM

  pasha நீங்கள் tube light?

  Reply : 0       0

  xlntgson Saturday, 01 October 2011 09:06 PM

  pasha, நாய்கள் உறவு கொள்வதை பார்த்து இரசிக்கிறவர்கள் இருக்கவே செய்கின்றனர்! உறவை வளர்க்க ஆண் நாய் பெண் நாய்களுக்கு ஜோடி தேடி அதன் மூலம் தகாத உறவும் வளர்கிறது. ஒரு படத்தில் வீட்டில் வேலையற்று இருக்கும் வயது வந்த பெண் திருமணத்தைப் பற்றி கவலைப்படாத தந்தை, தனது நாய்க்கு ஜோடி தேடி திரிவது சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
  asker படிமத்தை விளங்கிக்கொண்டால் சரி! இருவருக்கும் எனது நன்றிகள்! தஸ்லிமா நஸ்ரின் தனது லெஜ்ஜா நூலில் எழுதி இருக்கிறார் குடிகார கணவனைவிட நாய்-

  Reply : 0       0

  KLM Friday, 30 September 2011 05:35 PM

  இந்த கடையினால் யாருக்குப் பாதிப்பு ஏற்பட்டதா?

  Reply : 0       0

  Akkaraipattu Friday, 30 September 2011 05:37 PM

  நல்லத்துக்கு எல்லாம் காலம் இல்லப்பா இப்போ ........ஹி ஹி ஹீ...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .