2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று கைகொடுப்பது காலத்தின் கட்டாயம்: சிவாஜில

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றையொன்று நேசித்துக் கைகொடுப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கிறேன் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேலணை வேணியன்,  சி.பத்மநாதன் ஆகிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது வேறு. அதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது என்பது வேறு. உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றையொன்று நேசித்துக் கைகொடுப்பது என்பது காலத்தின் கட்டாயம் அந்த வகையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கிறேன்' என்றார்.  

இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி. நல்லையா குமரகுருபரன் உரையாற்றுகையில், எதிர்வரும் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டை பறைசாற்றி நிற்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X