2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

துமிந்த சில்வாவின் மூளைக்கு பாரிய பாதிப்பில்லை

Super User   / 2011 ஒக்டோபர் 15 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுமையா றிஸ்வி)

துப்பாக்கிப் பிரயோகத்தினால் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த  சில்வாவின் ஆரோக்கிய நிலை முன்னேறி வருவதாகவும் அவரின் மூளையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துமிந்த சில்வாவின் நெற்றிக்கூடாக நுழைந்த துப்பாக்கி குண்டொன்று தலையின் பின்புறத்துக்கூடாக வெளியேறியுள்ளதாகவும் முன்னர் கருதப்பட்டதைப்போல் அவரின் தலைக்குள் துப்பாக்கி குண்டு புதைந்திருக்கவில்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள்தெரிவித்தன.

அதேவேளை மற்றொரு குண்டு, தலையின் பின் பகுதியில் மூளையும் முள்ளம்தண்டும் சேரும் இடத்தில் இருப்பதாகவும் அது உயிராபத்தானது இல்லை என்பதால் அந்த குண்டை மருத்துவர்கள் அகற்றாமலிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதனால் அவருக்கு கடும் தலைவலிகள் ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஷவேந்திர கமகே, டெய்லி மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில், முக்கிய உடலுறுப்புகளில் துப்பாக்கி குண்டுகள் பல சிப்பாய்கள் முழுமையாக குணமடைந்ததை தான் கண்டுள்ளதாகவும் எனவே இதுவொரு விதிவிலக்கு அல்ல எனவும் கூறினார்.
 


  Comments - 0

 • azzuhoor Sunday, 16 October 2011 03:31 AM

  இருந்தால் தானே பாதிப்பு வாரத்துக்கு ...

  Reply : 0       0

  xlntgson Monday, 17 October 2011 10:20 PM

  மூளை சாலிகள் எதற்கெல்லாம் மூளையைப் பயன்படுத்துவார்களோ?

  Reply : 0       0

  ik Saturday, 15 October 2011 10:00 PM

  மற்றுமொரு நாடகம் என்று எண்ணத் தோன்றுகிறது!

  Reply : 0       0

  ilakijan Saturday, 15 October 2011 10:21 PM

  அப்படியொன்று அவருக்கு இருக்கா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X