Super User / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அடுத்த ஆண்டுஇலங்கையின் நீதி துறையில் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக விருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இவற்றுக்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து அடுத்த நிதியாண்டுக்கான நீதியமைச்சின் செயல்பாடுகளுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் உலக வங்கியின் இலங்கைக்கான விதிவிட பிரதிநிதி டயரிட்டோ காயீற்கும் இடையில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து உலக வங்கி பணிப்பாளர் அமைச்சரிடம் வினவிய போது, யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் 30 ஆண்டுகளாக முடங்கி போயிருந்த நீதிமன்ற செயற்பாடுகள் அரச கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தற்பொழுது மீண்டும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்திருப்பதாக பதிலளித்தார்.
குறித்த பகுதிகளில் நீதிமன்ற அலுவல்களை தமிழ் மொழியில் திறம்பட முன்னெடுப்பதற்காக தாய் மொழியில் கடமையாற்ற கூடிய நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், அதற்கேற்ற வகையில் எல்லாத் தரங்களிலுமான ஆளணியின் அவசியம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கை போலவே கிழக்கு மாகாணத்திலும் நீதி துறையின் செயல்பாடுகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை தமது அமைச்சு நன்கு உணர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மூன்று வர்த்தக மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவை சகலவிதமான வர்த்தக ரீதியிலான வழக்குகளையும் கையாளவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இதன்போது நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், தங்கியிருந்து பயிற்சி பெறத்தக்கதாக அந்நிறுவனம் விஸ்தரிக்கப்படவிருப்பதாகவும், அதற்கு மேலதிகமாக நீதி கலாபீடம் ஒன்றை நிறுவ தாம் உத்தேசித்திருப்பதாகவும், அதனால் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் துறைசார் நிபுணர்களும் அதிக பயனடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
அடுத்த நிதியாண்டுக்கான நீதி அமைச்சின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஹக்கீம் அளித்த விளக்கங்கள் தங்களுக்கு போதிய தெளிவை ஏற்படுத்தியிருப்பதாகவும், குறிப்பிட்ட காலப்பகுதியில் நீதியமைச்சின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கும், வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் உலக வங்கி தேவையான ஒத்துழைப்பையும், நிதியுதவியையும் வழங்கும் என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டயரிட்டோ காயீ இதன்போது உறுதியளித்தார்.
அமைச்சர் ஹக்கீமுடனான இச்சந்திப்பின் போது உலக வங்கியின் இலங்கைக்கான பொருளாதார நிபுணர் ரஸே சுஸானும் கலந்துகொண்டிருந்தார்.
31 minute ago
39 minute ago
47 minute ago
1 hours ago
faizmohamed Tuesday, 25 October 2011 03:39 AM
தலைவா கல்முனை பாருங்க பாவம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
47 minute ago
1 hours ago