2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

எமது சவால்களை தீர்ப்பதற்கு இறக்குமதியாகும் கருத்துக்களில் தங்கியிருக்க முடியாது: ஜனாதிபதி

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எமது பிரச்சினை எதுவாக இருந்தாலும் அது பயங்கரவாதமாக, பிரிவினைவாதமாக, சுற்றுச்சுழல் பிரச்சினையாக இருப்பினும் அதை தீர்க்க எமது சொந்த மூலோபாயங்களை பயன்படுத்த வேண்டுமேயொழிய இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்கள் மற்றும் கொள்கைகளில் தங்கியிருக்க கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்ல, ரஜமல்வத்த விளையாட்டு திடலில் இடம்பெற்ற 'தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டம்' தொடர்பிலான பிரதான நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையில் பன்னெடுங் காலமாக இருந்துவரும் மரபுகள், கலாசாரங்கள், சமய விழுமியங்கள் ஆகியன எமது பிரச்சினைகளை தீர்க்கவல்லன.

நாம் சூழலை நேசிக்கும், தாவரங்களை பாதுகாக்கும் தேசத்தவர்கள். மரம் நடத்தவறும் எவரும் இந்த நாட்டின் மைந்தன் என்றோ மகள் என்றோ தன்னை கூறும் அருகதை அற்றவர்.

தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டம் எமது இளம் சந்ததியினரை கருத்தில் கொண்டே செயற்படுத்தப்படுகின்றது. இன்று நாம் நடப்போகும் 1.1 மில்லியன் மரங்கள் இந்நாட்டின் இயற்கை சூழலை நிரந்தரமாக பாதுகாக்க உதவும்.

எமது முன்னோரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகளினால் நாம் நன்மையடைந்து வருகின்றோம். எனவே எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான சுற்றுச்சூழலை விட்டு செல்வது எமது கடமையாகும் என்றார்.


  Comments - 0

 • ullooran Tuesday, 15 November 2011 10:05 PM

  மரம் நடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல்..... அதைப்ப ராமரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் இதன் பயன் எவ்வளவு பெறுமதி மிக்கதாக அமையும்.............!

  Reply : 0       0

  thivaan Wednesday, 16 November 2011 02:48 PM

  மரம் நடாவிட்டால் பரவாயில்லை, மரங்களை அளிக்காமல் இருந்தாலே போதும். ஆட்சியில் நாட்டில் வெட்டிய மரங்கள்தான் அதிகம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .