2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மாநாடு

Kogilavani   / 2011 நவம்பர் 19 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் 14வது தேசிய பிரதிநிதிகள் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் கித்சிறிகமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளரும், மேல்மாகாண சபை உறுப்பினாருமான எஸ்.ஏ.டீ.ஜெகத்குமார, பொருளாளர் எம்.எம். அன்வர் உட்பட நிர்வாகிகள், 400இற்கும் மேற்பட்ட கிளை  சங்க தலைவர்கள், செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இலங்கை சமூர்த்தி அதிகார சபையின் கீழ் கடமையாற்றும் சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய ஊழியர்களையும் திணைக்கள சேவைக்குள் உள்வாங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றை ஏற்றுக் கொள்வது தொடர்பாக சகல பிரதிநிதிகளதும் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதேவேளை, 2011- 2012 வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும், ஒவ்வொரு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மரணித்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இழப்பீட்டு காசோலைகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .