2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டமூலம் விரைவில் அமுல்படுத்தப்படும்: நீதி அமைச்சர்

Super User   / 2012 நவம்பர் 18 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டமூலம் விரைவில் அமுல்படுத்தப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். எனினும் இந்த திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கான பூரண அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

எமது மூதாதையர்களினால் இந்த சட்டம் பல தசாப்தங்களுக்கு முன்னர் எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதாமாகும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.

எனினும் இந்த சட்டமூலத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த சட்டத்தில் மேற்கொள்ள வேண்டி திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸர்மிளா ஸெய்யத்தின் சிறகு முளைத்த பெண் எனும் கவிதை நூல் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  Comments - 0

 • ahamed ruwais Monday, 19 November 2012 04:22 AM

  அன்புல்ல ரவுப் ஹக்கீம் அவர்களே... கவனமா செய்யுங்க. கிழக்கு மாகாணசபை போல விளையாட்டு காட்டிடாதீங்க. முஸ்லிம்களுக்கு மிஞ்சி இருக்கிறது இது மட்டும் தான். அதையும் சீரலிச்சிராதீங்க. வியாபரம் பண்றதுக்கு எத்தனையோ வழி இருக்கு. நீங்கள் முஸ்லிம்.

  Reply : 0       0

  anver Monday, 19 November 2012 05:34 AM

  இவைகள்தான் மக்களுக்கு பிரயோசனம் தரக்கூடியது. மற்றவர்கள் மாதிரி கொமிசனுக்காகவும்,சமுதாயத்தை காட்டிக்கொடுத்து பணம் சம்பாதிப்பவர்கள் அல்ல. முஸ்லீம் காங்கிரஸ் மக்களுக்காக மட்டும். ஒரு தனிநபருக்கான கட்சி அல்ல உணர்ந்துகொள்ளுங்கள்.

  Reply : 0       0

  Nijmaudeen, Kantalai Monday, 19 November 2012 09:45 AM

  என்ன சொன்னாலும் மக்கள் கேட்பதற்குத் தயாராகவே உள்ளார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .