2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் பஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

பஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கத்தில் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலைய கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர, இலங்கைக்கான பஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் சவூதி அரேபியாவிற்கான முன்னாள் தூதுவர் ஜாவிட் யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

பலஸ்தீன மக்களின் துன்பங்களை வெளிக்காட்டும் வகையிலான புகைப்பட கண்காட்சியும் இதன்போது இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் 80 இடங்களில் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .