2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

Super User   / 2013 ஜனவரி 03 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


வீதியில் வைத்து மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் குறித்த சந்தேகநபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலயத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கொச்சிக்கடை, வெலியேன 18ஆம் கட்டை பிரதேசத்தில் வீதியோரத்தில் இடம்பெற்றுள்ளது.

கொச்சிக்கடை, மோலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ரேகினி துசாரி என்ற 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே கணவனால் படுகொலை செய்யப்பட்டவராவார்.

குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .