2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவருக்கு அபராதம்

Super User   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. என்.முனாஷா

சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க 10,000 ரூபா அபராதம் விதித்ததுடன் மோசடி செய்த மின்சார கட்டணமான 111,169.94 சதத்தினை செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

ஜா-எல, செத்தப்பாடுவ பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கே நீதவான் இந்த தண்டணையை விதித்தார்.

பிரதிவாதி மின்சார மாணியின் சீலினை உடைத்து மாணியின் சுற்றும் வட்ட சட்டத்தை நிறுத்தி வைத்து மோசடியான முறையில் 111,169.94 சதம் பெறுமதியான மின்சாரத்தை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--