2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் தொழிற்பயிற்சி மையங்கள்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் காலத்திலேயே மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி கற்கைகளை வழங்கும் நோக்கில், மாவட்டங்கள் தோறும் தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலைகளில் தொழிற்பயிற்சி மையங்களை நிறுவுவதற்கு, இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி முதலாவது பாடசாலை தொழிற்பயிற்சி மையம் கொழும்பு ஆனந்தா கல்லூhயில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபர் கேர்ணல் எல்.எம்.பி. தர்மசேன தலைமையில் இடம்பெற்ற பயிற்சி மைய அங்குரார்ப்பண நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் கேர்ணல் தர்சன ரட்ணாயக்க உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே ஒரு மாணவனிடம் மறைந்துள்ள தொழில்சார் திறன்களை அடையாளம் கண்டு, அந்த ஆற்றலை வளர்ச்சியடையச் செய்தால் பாடசாலையை விட்டு வெளியேறும் நேரத்தில் அம்மாணவன் குறிப்பிட்ட தொழில் துறையில் முறையாக பயிற்றப்பட்டிருப்பட்டிருக்கும் அதேவேளை அரச அங்கீகார சான்றிதழும் கிடைக்கும். இந்த  எண்ணக்கருவின் அடிப்படையிலேயே பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

இத்திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் உபகரணங்களுடனான தொழிற் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படுவதுடன் தொழிற்பயிற்சி அதிகார சபையினால் போதனாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கற்கைநெறியை பூர்த்தி செய்யும் பாடசாலை மாணவர்களுக்கு அரச அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X