2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சட்டக் கல்லுரி முஸ்லிம் மஜ்லிஸின் இப்தாரை புறக்கணிக்க மாணவர்கள் தீர்மானம்

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்டக் கல்லுரி முஸ்லிம் மஜ்லிஸின் இப்தாரை புறக்கணிக்க முஸ்லிம் மாணவர்கள் தீர்மானித்துள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முஸ்லிம் மஜ்லிஸின்  நிர்வாக தெரிவில் இடம்பெற்ற முறைகேடுகளினால் முதலாம் வருட  மாணவர்கள் தனித்து செயற்பட தீர்மானித்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத மாணவரொருவர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த சில மாதங்களாக நட்பு நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எந்த செயற்பாடுகளிலும் பங்குபற்றாது தமது எதிர்ப்பை  முதலாம் வருட  மாணவர்கள் வெளிக்காட்டி வருகின்றனர்.  இதன் ஒரு அங்கமாகவே நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வினை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, சுமார் 82 மாணவர்கள் கையொப்பமிட்ட முறைப்பாடொன்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான சட்டக்  கல்லூரி பேரவைக்கும் சட்டக் கல்லூரியின்  அதிபருக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--