2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அறிவக அங்கீகார சுவர்ண விருது விழா- 2013

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இக்டா என்று அழைக்கப்படும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவக அங்கீகார சுவர்ண விருது விழா- 2013 நிகழ்ச்சியை அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. அறிவக நிலையங்கள் மூலம் நாட்டுக்கு பணிபுரியும் அறிவக உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர்களை கௌரவிப்பதே இந்த விருது வழங்கலின் நோக்கமாகும். 

தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சிட் சியம்பலாபிட்டிய தலைமை நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடு பூராகவுமிருந்து தெரிசெய்யப்பட்ட அறிவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

மாகாணங்களுள் மிகச் சிறந்த அறிவகம், மாவட்டங்களில் மிகச் சிறந்த அறிவகம், பேராசிரியர் வீ.கே. சுமரநாயக்கா ஞாபகார்த்த விருது மற்றும் அறிவக சமூக விருது என 50க்கு அதிகமான விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.

இதன்படி இலஙகையில் மிகச் சிறந்த அறிவக  அங்கீகார சுவர்ண விருதினை இரத்தினபுரி மாவட்டத்தின் பலங்கொடை அறிவகம் பெற்றுக்கொண்டது. அத்துடன் பேராசிரியர் வீ. கே. சுமரநாயக்கா ஞாபகார்த்த விருது ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சூரியவௌ அறிவகத்துக்குக் கிடைத்தது.

மாகாண ரீதியில் ஒன்பது விருதுகளும் மாவட்ட ரீதியில் 20 விருதுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவற்றைத் தவிர 19 சிறப்பு விருதுகளும் ஒரு அறிவக சமூக விருதும் வழங்கப்பட்டன. அறிவக சமூக விருதினை பலங்கொடை அறிவகப் பகுதியைச் சேர்ந்த கமள் சதுரங்க கமகே என்பவர் பெற்றுக்கொண்டார்.


இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய அறிவகச் செயல்திட்டம் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் ஒரு எண்ணக்கருவென்றார்.

மக்களுக்கு, சிறப்பாகச் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நன்மைகள் மிகச் சிறந்த விதத்தில் கிடைக்கச் செய்வது ஜனாதிபதியின் மனதில் எப்போதும் இருந்து வந்த அவா ஒன்று என அமைச்சர் கூறினார்.

இந்த அவாவை நிறைவேற்றுவதற்கான பிரதான மார்க்கங்களுள் அறிவகம் முக்கியமானதென அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த விழாவின்போது கலாநிதி பஷீர் அஹமட் சத்ராசினால் எழுதப்பட்ட  'அறிவகம் எனும் இலங்கை தொலைமையத்தின் அனுபவம்'  என்ற  ஆங்கில நூலும் மொழிபெயர்ப்பாக சிங்களத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .