2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ.மு.கா. முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக என்றும் ஒலிக்கும்: ஹரீஸ்

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக என்றும் ஒலிக்கும் என்பதில் எம் சமூகம் நம்பிக்கை வைத்துள்ளதை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

'நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தில் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

இத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காகவும், கட்சித் தலைமையினை பலப்படுத்துவதற்காகவும் வாக்களித்த கம்பஹா, கொழும்பு, களுத்துறை மற்றும் ஏனைய மாவட்ட முஸ்லிம் சகோதரர்கள், இளைஞர்கள், பெரியார்கள், உலமாக்கள், பெண்கள், கட்சிப் போராளிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் கட்சியின் தேர்தல் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் குறிப்பாக இளைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தேர்தலில் எமது கட்சி பெரும் சவால்களுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் எமது ஆசனங்களை மீளவும் உறுப்படுத்தியுள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .