2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு இருவர் போட்டி?

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ரொயிஸ் விஜித்த பெர்னாந்து நகை கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பதில் எதிர்க் கட்சித் தலைவராக கெலிசன் ஜயகொடி பணியாற்றினார்.

ரொயிஸ் விஜித்த பெர்ணான்டோ மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக, வெற்றிடமாக உள்ள எதிர் கட்சித் தலைவர் பதவியை பதில் எதிர் கட்சித் தலைவராக பணியாற்றும் கெலிசன் ஜயகொடி எதிர்பார்த்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாண சபை தேர்தலில் நீர்கொழும்பு தேர்தல் செயற்குழுவில்; பிரதான இடம் வகித்து செயற்பட்ட மாநகர சபை உறுப்பினர் கிஹான் பெர்ணான்டோவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்;கப்பட வேண்டும் என்று  கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடையேயும் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாக தெரிய வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .