2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மொரட்டுவ தோற்பொருள்; அபிவிருத்தி நிலையத்திற்கு டக்ளஸ் விஜயம்

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


மொரட்டுவ தோற்பொருட் அபிவிருத்தி நிலையத்திற்கு இன்று விஜயம் செய்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

கொழும்பு மொரட்டுவப் பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்க பாதணி தோற்பொருள் அபிவிருத்தி நிலையத்திற்கு சென்ற அமைச்சர் தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே அங்குள்ள மற்றுமொரு கழிவு உலோகங்களினது களஞ்சியசாலைக்கும் அமைச்சர்; இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் நவாப் ரஜாப்தீன் அமைச்சின் மேலதிக செயலாளர் சுசந்த டி சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .