2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நூற்றாண்டு மாநாடு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

இலங்கை  அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நூற்றாண்டு மாநாடு நீர்கொழும்பு, பெரியமுல்லை ஜ§ம்ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள அஹ்மதிய்யா ஜ§பிளி மண்டபத்தில்; சனிக்கிழமை (01.08.2015) நடைபெற்றது.

இலங்கையில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஸ்தாபிக்கப்பட்டு இந்த ஆண்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதையொட்டி விசேடமாக இந்த தேசிய மாநாடு இடம்பெற்றது.

இலங்கை அஹ்மதியா  முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் ஏ.எச்.நாஸிர் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வருகை தந்த அஹ்மதி ஆண்கள் மற்றும் பெண்;கள், பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து நாட்டில் தற்காலிகமாக தங்கியுள்ள அஹ்மதி முஸ்லிம்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

இந்த மாநாட்டுக்கு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் சர்வதேச  அஹ்மதியா ஜமாஅத்தின் தலைமையகத்தின்  சார்பில்  அதன் பிரதிநிதி   சிராஸ் அஹ்மது சாஹிப்  சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் விசேட உரைகள் தமிழ். சிங்களம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் இடம் பெற்றதுடன் உர்து நஸம்,  (கீதம்)   கஸீதா என்பனவும் இடம்பெற்றன. இதன்போது கடந்த ஒரு நூற்றாண்டு சகாப்தத்தில் இலங்கை  அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் வரலாறு பற்றிய உரைகளும்; இடம்பெற்றன.

இதேவேளை, இலங்கை அஹ்மதியா  முஸ்லிம் ஜமாஅத்தினால்  வெளியிடப்பட்டுள்ள அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. முதல் பிரதியை இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிராஸ் அஹ்மது சாஹிபிடம் இலங்கை  அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் ஏ.எச்.நாஸிர் அஹ்மத் வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்வியில் திறமை காட்டிய ஆண்கள் மூவருக்கும் பெண்கள் மூவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பிற்காக பங்களிப்பு வழங்கிய ஐவர் அல்குர்ஆன் பிரதிகள்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .