2021 மார்ச் 03, புதன்கிழமை

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழுவினால் நீர்கொழும்பில் துண்டுப்பிரசுர விநியோகம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

'ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும்  நாடாளுமன்றத்தை அமைப்போம்' என்ற தொனிப்பொருளில் அமைந்த துண்டுப்பிரசுரங்கள்,  ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழுவினால் நேற்று சனிக்கிழமை (08) நீர்கொழும்பில் விநியோகிக்கப்பட்டன.

இந்த துண்டுப்பிரசுரங்கள், நீர்கொழும்பு நகர மத்தியிலும், வார இறுதிச் சந்தையிலும்  நீர்கொழும்பு பிரதேச ஊடகவியலாளர்களால் விநியோகிக்கப்பட்டன.

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழவின் முக்கியஸ்த்தர் பிரடிகமகே உட்பட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் இதில் பங்குபற்றினர்.

'கிடைத்துள்ள ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் உறுதியான நாடாளுமன்றம் ஒன்றை அமைக்க செயற்படுவோம்,  ஊடக சுதந்திரத்தை படுபாதாளத்துக்கு கொண்டு சென்ற ஆட்சியாளர்கள் எவருக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம்' என்ற பிரதான வேண்டுகோளுடன் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த ஆட்சியின்போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடரபாகவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .