2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் கொண்டாட்டம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

ஐக்கியத் தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை (21) பிரதமராகப்பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, நீர்கொழும்பு நகரில் பல பகுதிகளிலும் உள்ள மக்கள், பட்டாசுக்கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்ணான்டோவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் நடைப்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை 29,589 மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் ஐக்கியத் தேசியக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பவல் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .