2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் 4 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

படையினர் போன்று நடித்து 15,200 ரூபா பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 4 பேரை எதிர்வரும் 23ஆம் திகிதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் டபிள்யூ.கே. துலானி எஸ்.வீரதுங்க உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோதே நீதவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். 

நீர்கொழும்பு,  அங்குருகாரமுல்ல பகுதியைச்  சேர்ந்த ஒருவரும் திம்பிரிகஸ்கட்டுவ பகுதியைச்  சேர்ந்த 3 பேருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பிலுள்ள தனியார் வியாபார நிலையமொன்றின் ஊழியரொருவர் தனது நண்பருடன் சைக்கிளில் கடந்த சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த இச்சந்தேக நபர்களான 4 பேரும் வித்தியலங்கார வித்தியாலயத்திற்கு அருகில் சைக்கிளை இடைமறித்துள்ளனர்.

தம்மை படையினரெனக் கூறிக்கொண்ட இச்சந்தேக நபர்கள்,  இவரது சைக்கிளில் கஞ்சா இருக்கின்றதாவென சோதனை செய்வதுபோன்று நடித்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களெனவும் போதைப்பொருள் பாவனைக்கு தேவையான பணத்தை ஈட்டிக்கொள்வதற்காக இதுபோன்ற பல கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .