2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பொது இடத்தில் ஹெரோயின் புகைத்த பிச்சைக்காரருக்கு 5000 ரூபா அபராதம்

Super User   / 2011 ஜூன் 23 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

பொது இடத்தில் ஹெரோயின் புகைத்த பிச்சைக்காரர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று 5000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

கொள்ளுபிட்டியில் பொதுஇடமொன்றில் வைத்து இவர் ஹெரோயின் புகைத்தாக பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டார்.

இரு கைகளும் இல்லாத இந்த நபர் ஹெரோயின் புகைப்பதற்கு கைகளுக்குப் பதிலாக தனது கால்களை பயன்படுத்தினாராம்.

சிறிசேன குமார எனும் இந்நபர் கொழும்பு கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரட்ன முன்னிலையில ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவருக்கு நீதவான் 5000 ரூபா அபராதம் விதித்தார்.
 


  Comments - 0

 • IBNU ABOO Friday, 24 June 2011 02:59 AM

  சொந்த இடம் இல்லாத பிச்சைக்கார் அந்த பொது இடத்தை தன் சொந்த இடமாகக் கருதினாரோ?

  Reply : 0       0

  xlntgson Thursday, 07 July 2011 09:24 PM

  அபராதம் செலுத்தினாரா, சிறை சென்றாரா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .