2021 ஜனவரி 23, சனிக்கிழமை

விபசார விடுதி சுற்றிவளைப்பு; 7பேர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

வென்னப்புவ பொலிஸ் பிரவுக்குட்பட்ட போலவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மத்திய நிலையம் எனக் கூறி விபசார விடுதியை நடத்தி  வந்ததாகவும் இதன்போது போலி வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது கைதான பெண்கள்  குளியாப்பிட்டி, நீர்கொழும்பு, கடவத்தை மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களை இன்று மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .