2021 மார்ச் 01, திங்கட்கிழமை

உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பு

S. Shivany   / 2020 நவம்பர் 10 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம் 
பலாங்கொடை- ஓலுகங்தொட்ட ஸ்ரீ சுதர்மாராம விஹாரை பூஜைக்குரிய பொகவந்தலாவ ரா{ஹல தேரரின,; அகரம் அறக்கட்டளைகள் நிறுவனத்தின் அனுசரணையுடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை சிறி-கந்துரை மற்றும் ஹொரணை ரைகம் தோட்டத்துக்கு, சுமார்  இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தின் சமூக சேவையாளரும் மத்துகமை மத்தியஸ்த சபை உறுப்பினருமான கே. கனகரின் வேண்டுகோள்களுக்கமைய,  மேற்படி உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நிலையில், எவ்வித வருமானமும் இன்றி, பசிப் பட்டினியால் அல்லலுற்று வந்த   மத்துகமை, பதுகமை நவ ஜனபதய 795-சீ கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட,  சிறிகந்துர தோட்டத்தைச் சேர்ந்த, சுமார்  70 குடும்பங்களுக்கும் மற்றும் ஹொரணை ரைகம தோட்டத்தைச் சேர்ந்த, ஐந்து குடும்பங்களுக்கும் அகரம் அறக்கட்டளைகள் நிறுவனத்தின் அமைப்பாளர்களா சீ. நவீன் மற்றும் ஏ. அருள் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .