2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஒரு வார காலம் சுய தனிமை

S. Shivany   / 2020 நவம்பர் 15 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்னம்

களுத்துறை நீதவான் நீதிமன்ற  நீதிபதி உள்ளிட்ட  சட்டத்தரணிகள், நாளை (16) முதல் ஒரு வார காலம், பணிகளில் இருந்து தற்காலிகமாக விலகி,  சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட போவதாக, களுத்துறை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.   

களுத்துறை நீதிமன்ற நீதிபதியுடன் மிகவும் நெருக்கமாக பணிபுரியும் ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், களுத்துறை பிரிவுக்குப்  பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களின்  பரிந்துரைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய,சட்டத்தரணிகள் சங்க செயற்குழு உறுப்பினர்கள், கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஒன்றுக்கூடி  ஏகமனதான தீர்மானத்தை எடுத்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .