2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்குரிய காணி, நகர அபிவிருத்தி அதிகாரசபை வசமானது

Editorial   / 2017 நவம்பர் 02 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான நகர அபிவிருத்திக்காக காணியைப் பெற்றுக் கொள்ள, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள ஏக்கல பிரதேசமானது, இந்நாட்டு தொழில் பிரிவு உற்பத்திகளுக்குப் பாரியளவு பங்களிப்பைச் செய்து வருகின்றது.

மேல் மாகாண வலய பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விமான நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், பின்வரும் உப வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்படப்பட்டுள்ளது. இதற்கமைய,

• பெறுமதி ஒன்று சேர்க்கின்ற தொழில்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்ட பிரதேசத்தை ஸ்தாபித்தல்.

• சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.

• வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு விடயங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.

• ஊடக நகரம்

• நடுத்தர வர்க்கத்தினர்களுக்கான வீடு மற்றும் பொது வசதிகள் சேவை

மேற்கூறப்பட்ட உப வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய இவ்விமான நகர வேலைத்திட்டத்தை, அரச - தனியார் கூட்டின் அடிப்படையின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அதற்கு அவசியமான, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்குரிய 80 ஏக்கர் நிலப்பரப்பை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைப்பது தொடர்பில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான நுழைவுப் பிரதேசத்தை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்டிய கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் 18ஆவது மைல்கல்லுடன் தொடர்பான பிரதேசத்தைப் போக்குவரத்து, வியாபாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்படும் அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவது தொடர்பிலும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .