Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட துன்கல்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (27) காலை புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் 491 புதிய பொலிஸ் நிலையங்களை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 491 ஆவது பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மேல் மாகாண வடக்கு பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அநுர சேனாநாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லர், நீர்கொழும்பு பிராந்தியத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களிகளின் பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமத தலைவர்கள் ஆசி வழங்கினர்.
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள, துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையம் 9. 3 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட அதிகரத்துக்கு உட்பட்டதாகும். 32,500 பொதுமக்கள் இந்த பிரதேசத்தில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 minute ago
24 minute ago
27 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
27 minute ago
29 minute ago