2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

பொருட்களை ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்து விபத்து

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

கொழும்பிலிருந்து, நொச்சியாகம நோக்கி, பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கனரக லொறி ஒன்று, இன்று (24) அதிகாலை, வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 5.50 மணியளவில், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புத்தளம் -  கொழும்பு பிரதான வீதியின், முந்தல் நகருக்கு, சற்று தொலைவிலேயே, மேற்படிவிபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உடன் ஸ்தலத்திற்கு விரைந்த முந்தல் பொலிஸார், வீதியில் புரண்ட லொறியிலிருந்த பொருட்களை இறக்கி, லொறியினை வீதியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட உறக்கமே, இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்தில், எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், இவ்விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--