2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

விபசார விடுதி சுற்றிவளைப்பு-நால்வர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்ஸ-காலி வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று கல்கிஸ்ஸ பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

 கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட கட்டளைக்கமைய நேற்று (20) மாலை 3.20 மணியளவில் குறித்த விபசார நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது இதன் முகாமையாளர் உள்ளிட்ட 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் 31, 29, 31, 48 வயதானவர்கள் என்றும், இவர்கள் பாதுக்க, நாரம்மல, பேருவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் (21) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .