2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கொழும்பு மாநகர சபையை அதிகார சபையாக்கும் திட்டத்தை ஐ.தேக. தடுத்து நிறுத்தும் : ரணில்

Super User   / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர சபையை ஓர் அதிகார சபையாக மாற்றும் திட்டத்தை ஐ.தே.க. வெற்றிகரமாக தடுத்து நிறுத்தும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்காக அதை கொழும்பு மாநகர அதிகார சசபையாக மாற்றும்  தனது திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று கூறியமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து மேலும் கூறுகையில், 'குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகளை இடிப்பதை நாம் தடுத்து நிறுத்தியதைப் போன்று கொழும்பு மாநகர அதிகார சபைத் திட்டத்தையும் நாம் தடுத்து நிறுத்துவோம்' என்றார்.
'அவர்கள் கொழும்பில் தோல்வியைத் தழுவிய பின்னரும் அவர்கள் எப்படி இவ்வாறு பேசலாம்' என ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அதேவேளை கொழும்பு மாநகர சபை பிரதி மேயராக, டைட்டஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் ரணில் கூறினார். கொழும்பு நகரவாசிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐ.தே.க. செயற்படும் என அவர் தெரிவித்தார்.

கொழும்பின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.ஜே.எம். முஸம்மில் இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில், தான் அனைத்து இன மக்களாலும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து சமூகங்களுக்காகவும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். 'என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து சமூகத்தினருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என அவர் கூறினார்.

தன்னை எப்போதும் மக்கள் அலுவலகத்திலோ வாசஸ்தலத்திலோ சந்திக்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார். (Pix by: Pradeep Pathirana)


 


  Comments - 0

 • sahabdeen Tuesday, 11 October 2011 10:41 PM

  யூ.என்.பி. கொழும்பு மற்றும் Kalmunai தவிர எல்லா இடங்களிலும் இழந்துள்ளது. இதில் என்ன சந்தோசம் ??? இனியாவது புரிந்து கொள்வார்களா ???

  Reply : 0       0

  meenavan Tuesday, 11 October 2011 05:33 AM

  கொழும்பில் அரசு Vs U.N.P. கயிறு இழுப்பு ஆரம்பமாகுமோ? வெற்றி யாருக்கு? பொறுத்திருப்போம்.

  Reply : 0       0

  vaasahan Tuesday, 11 October 2011 03:33 PM

  மக்களின் தீர்ப்புக்கு காது கொடுப்பது நல்லது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .