2020 நவம்பர் 28, சனிக்கிழமை

நீர்கொழும்பில் பிடிபட்ட சிறுத்தை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தூவன பிரதேசத்திலுள்ள விலங்குப் பண்ணையில் நீண்டகாலமாக விலங்குகளை உட்கொண்டுவந்த சிறுத்தையொன்றை பிரதேசவாசியொருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிடித்துள்ளார்.

தூவன, தேவாலய வீதி பிரதேசத்தில் தனது வீட்டுக்குப் பின்னால் சிறியளவில் விலங்குப் பண்ணையொன்றை நடத்திவரும் ஒருவரே இச்சிறுத்தையைப் பிடித்துள்ளார்.

தனது விலங்குப் பண்ணையிலுள்ள ஆடுகள், தாராக்கள் உள்ளிட்ட விலங்குகள் கடந்த இரு  வருடங்களாக மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், அவர் கூண்டொன்றுக்கு பொறிவைத்த நிலையில் அதில் இச்சிறுத்தை அகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சிறுத்தை அப்பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் வசித்து வந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--