2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

‘அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டும்’

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தற்போதைய ஆட்சியாளர்கள், அரசியல் கைதிகளைப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கருணா அம்மான் என்பவர், இன்று சுதந்திரமாக வெளியில் திரிவதாகவும் எனினும், அவரின் கீழ் செயற்பட்ட இளைஞர், யுவதிகள் இன்றும் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளனரெனவும் சா​டினார். 

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறித்திரிந்த அரசாங்கம் கூட, இந்தக் கைதிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையெனவும் எனவே, தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பளித்து, விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .