2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

’அரசியல் தீர்க்கதரிசனத்திலும் முன்னின்ற நாவலர் பெருமான்’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

நாவலர் பெருமானிடமிருந்த தீர்க்கதரிசனம் வெறுமனே சமயத்துடனும், சமூதாயத்தின் கல்வியுடனும் மாத்திரம் நின்றுவிடவில்லை. அரசியல் தீர்க்கதரிசனத்திலும் கூட நாவலர் பெருமான் முன்னின்றதாக, சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் ஏற்பாடு செய்த நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம், நேற்று (20), நல்லூரிலுள்ள ஸ்ரீதுர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“நாவலர் பெருமானின் காலத்தில் தமிழர்களுக்கு ஆளுமை மிக்க, கடவுள் நம்பிக்கையுடைய, எங்கள் சமூகத்தைச் சேர்ந்ததொரு அரசியல் தலைவர் தேவை நிலை உருவானது. அப்போது கொழும்பில் பிறந்து, கொழும்பிலேயே வாழ்ந்து கொண்டிருந்த சேர் பொன்னம்பலம் இராமநாதனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து இவர் தான் தமிழர்களுக்குத் தலைவனாகும் தகுதியுடையவர் என்பதை நாவலர் தான் முதன்முதலில் வெளிப்படுத்தினார்.

“பிரிட்டோ எனும் அரசியல்வாதி யாழ்ப்பாணத்தில் நாவலருக்கு நண்பராகவிருந்தார். பிரிட்டோ தான் தான் தமிழர்களின் பிரதிநிதியாகச் செல்கின்ற வாய்ப்பிருக்கின்றது எனக் கருதிய போது கல்வியாலும், ஆளுமையாலும், சமூக உணர்வாலும் சேர் பொன்னம்பலம் இராமநாதனை அழைத்து யாழ்ப்பாணத்திலொரு கூட்டத்தை நடாத்தி தமிழர்களுக்குப் பொருத்தமானவர் சேர். பொன்னம்பலம் இராமநாதனென நாவலர் அறிவித்தார். இதன் பின்னர் தான் சேர். பொன்னம்பலம் இராமநாதனொரு அரசியல் தலைவரானார்” எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .