2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

‘அளவீட்டை நிறுத்தாவிடின் போராட்டம் வலுப்பெறும்’

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கொழும்புத்துறை - நெடுங்குளம் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள அளவீடு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இல்லையேல் இதற்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோமெனவும் எச்சிரிக்கை விடுத்தார்.

பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு தொகை காணியைச் சுவீகரிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இதுவே இறுதி தடவயாக இருக்க வேண்டுமெனவும் இனி ஒரு தடவை அளவீட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், யாழ்ப்பாண பிரதேச செயலகம், நில அளவை திணைக்களம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், தேவை ஏற்படின் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்கு நிர்பந்திக்கப்படுவோமெனவும் எச்சரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--