2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 17 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வரை, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து, காரைநகர் கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலாக்கொலகே தெரிவித்தார்.

இதேவேளை, கைதானவர்கள் நால்வரும் தமிழ்நாடு புதுக்கோட்டை பகுதியினைச் சேர்ந்தவர் என வலாக்கொலகே தெரிவித்தார்.

இந்நிலையில், மீன்பிடிப்பதற்கு பயண்படுத்திய நாட்டுப் படகு மற்றும் சான்றுப் பொருட்கள் என்பன கைபெற்றப்பட்டுள்ளன.

கைதான மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .