Princiya Dixci / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் நேற்று வியாழக்கிழமை (19) அதிகாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு, இராமநாதபுரம் பகுதியிலிருந்து 3 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீரியல் வளத்துறை அதிகாரிகள் இவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
17 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago